நாட்டில் வடக்கு கிழக்கு பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று பிற்பகல் மழையுடன் கடுமையான காற்று மற்றும் மின்னல் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், மின்னலால் ஏற்படும் விபத்துக்களை தவிர்த்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.