பத்திரிகையாளர்  ஜமால்கசோஜி சவுதி அரேபியாவினால் வேண்டுமென்றே திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் தனது முதல் விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத படுகொலைகள் தொடர்பான ஐக்கியநாடுகளின்  விசேட அறிக்கையாளர் அக்கெஸ் கலமார்ட் தனது ஜமால்கஜோசி தொடர்பான தனது விசேட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தனது அறிக்கையில் விசேட அறிக்கையாளர் சவுதிஅரேபியாவின் இளவரசர் மீது குற்றச்சாட்டுகள் எதனையும் சுமத்தாத அதேவேளை தகுதி வாய்ந்த அதிகாரியொருவர் விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ள என தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபிய தூதரகத்திற்குள் ஜமால் கசோஜி நுழைந்தவுடன் அவர் மயக்கஊசியினால் தாக்கப்பட்டார் பின்னர் அவரது தலையை பிளாஸ்டிக் பையினுள் வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தனர் என விசேட அறிக்கையாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.