தலைமன்னார் பகுதியில் சட்டவிரோதமான முறையில் சங்குளை ஏற்றிச் சென்றவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபரிடமிருந்து 4 ஆயிரத்து 17 சங்குகள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

நேற்று கெப் வண்டியில் தலைமன்னாரிலிருந்து பேசாலை வரை ஆயிரத்து 645 சங்குகளை ஏற்றிச் சென்றபோது கைது  செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த சந்தேகநபரின் வீட்டில் 2 ஆயிரத்து 372 சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பேசாலையை சேர்ந்த 58 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் மன்னார் உதவி கடற்றொழில் பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.