(நா.தனுஜா)

பொலன்னறுவை மாவட்டத்தில் பல்லின மற்றும் மும்மொழி தேசிய பாடசாலையில் 245.9 மில்லியன் ரூபா செலவில் உயர்தர மாணவர்களுக்கான வகுப்பறைகள், விஞ்ஞான ஆய்வுகூட வசதிகளுடன் கூடிய மற்றுமொரு கட்டடத்தொகுதி என்பன அமைக்கப்படவுள்ளன.

இந்திய அரசாங்கத்தின் 300 மில்லியன் ரூபா நிதியுதவியின் கீழ் பொலன்னறுவை மாவட்டத்தில் பல்லின மற்றும் மும்மொழி தேசிய பாடசாலையில் தரம் 6 - 9 வரையான வகுப்புக்களை நடத்துதல், நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகளுடன் கூடிய இந்தப் பாடசாலையின் முதலாவது கட்டடத் தொகுதியை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அத்தோடு இப்பாடசாலையில் தரம் 12, 13 மாணவர்களுக்கான வகுப்பறைகள் மற்றும் விஞ்ஞான ஆய்வுகூட வசதிகளுடன் கூடிய மற்றுமொரு கட்டடத்தொகுதி அமைக்கப்பட வேண்டும்.

அதன் நிர்மாணப்பணிகள் வரையறுக்கப்பட்ட மத்திய பொறியிலாளர் சேவை தனியார் நிறுவனத்திற்கு 245.9 மில்லியன் ரூபாவிற்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.