பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட  கெர்கஸ்வோல்ட் லெச்சுமித்தோட்டம் மத்தியப்பிரிவு தோட்டத்தில் குளவி கொட்டிய நிலையில் 5 ஆண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ஐந்து ஆண் தொழிலாளர்களையே இவ்வாறு குளவி கொட்டியுள்ளது.

குறித்த  சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

அத்தோடு மலையகத்தில் பெறும்பாலான பகுதியில் காணப்படும் குளவி கூடுகளை அகற்றுமாறு உரிய தரப்பினருக்கு குறித்த தோட்டப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.