‍ஐ.சி.சி.யின் 12 ஆவது ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் 25 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து, டூப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு பர்மிங்காமில் ஆரம்பமாகவுள்ளது. 

தென்னாபிரிக்க அணி ஐந்து போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, மூன்று தோல்வியையும் சந்தித்துள்ள நிலையில் ஒரு போட்டி முடிவின்றி கைவிடப்பட்டுள்ளது.  

அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டும் எனில் தென்னபிரக்க அணி இறுதியான நான்கு ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டியது மிகவும் அவசியமாகும். அதனால் இப் போட்டி தென்னாபிரக்க அணியை பொறுத்தவரையில் வாழ்வா–சாவா என்ற நிலைதான். 

நியூஸிலாந்து அணி இதுவரை நான்கு போட்டியில் விளையாடி மூன்றில் வெற்றியை பதிவுசெய்துள்ள நிலையில் ஒரு போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது. 

துடுப்பாட்டத்திலும் சரி பந்து வீச்சிலும் சரி வலிமை மிக்க அணியாக நியூஸிலாந்து திகழ்கின்றது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு உலககோப்பை அரையிறுதிப் போட்டியில் இதே நியூஸிலாந்து அணியிடம்தான் தென்னாபரிக்க அணி தோல்வியடைந்தது. ஆகையினால் இப் போட்டிக்கு நியூஸிலாந்து பழதீர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் அரங்கில் இவ்விரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் நியூஸிலாந்து அணி 5 முறையும், தென்னாபிரக்க அணி 2 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

பர்மிங்காம் மைதானத்தை பொறுத்தவரையில் வானம் காலையில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படவதுடன் இலகுவான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.