மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

Published By: Daya

19 Jun, 2019 | 11:37 AM
image

மான்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் யுத்த காலப்பகுதிகளிலும் அதன் பின்னரும் மாற்றுத்திறனாளிகலாக்கப்பட்ட மக்களை சமூகம் சார் புனர்வாழ்வு ஊடாக மாற்றுத்திறனாளிகளை சமூகத்திற்குள் உள்வாங்கும் செயல் திட்டத்தின் கீழ் அவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்கும் முகாம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.


மாந்தை மேற்கு பிரதேச செயலகம் மற்றும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுசரணையில் வொய்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் மாந்தை மேற்கு பிரதேச செயளாலர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் குறித்த வைத்திய முகாமானது நேற்று செவ்வாய்க்கிழமை பள்ளமடு வைத்தியசாலை மற்றும் மாந்தை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமைனையில் இடம் பெற்றது. 

குறித்த வைத்திய முகாமிற்கு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.காண்டிபன் உட்பட மன்னார் மாட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் சேர்ந்த பொது சுகாதார  பரிசோதகர்கள் மற்றும்  மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றும் 10 மேற்பட்ட வைத்தியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


இறுதி யுத்தத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களை சேர்ந்த அனேக மக்கள் கால்,கைகளை இழந்த நிலையிலும் குண்டுகளின் சில பாகங்கள் உடலில் அகற்றப்படாத நிலையிலும் உரிய உதவிகள் இன்றி தற்போதும் வாழ்ந்து வருகின்றனர்.  


இவர்களுடைய வைத்திய தேவைகளை அடிப்படையாக கொண்டு குறித்த வைத்திய  முகாமானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


குறித்த முகாமின் ஊடாக மாற்று திறனாளிகளாக காணப்படும் குறிப்பாக இறுதியுத்ததில் பாதிக்கப்பட்டு அங்கவீனமுற்ற நிலையில் மாற்றுத்திரனாளிகளாக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.


அதே நேரத்தில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டவர்களில் மேலதிக வைத்திய தேவைகள் உடையவர்களுக்கான விசேட ஏற்பாடுகளும் விரைவில் செய்யப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08