பாகிஸ்தானில் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் மாகாணம் நங்கானா சாஹிப் மாவட்டத்தில் உள்ள பாகா ‌‌ஷக் என்ற கிராமத்தில் இருதரப்புக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டபோது அங்கும் வாய்த்தர்கங்கள் ஏற்ப்பட்டது.

இந்நிலையிலேயே இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.இதில் 5 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு குறித்த சம்பத்தில் படுகாயமடைந்தவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும்,சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

குறித்த இச்சம்பவத்தை அடுத்து அந்நாட்டு பொலிஸார் தீவிர புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.