மலையகத்தில் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட 12 ஆயிரம் வீடுகளுக்கு 99 வருட குத்தகை அடிப்படையிலான அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திஸாநாயக்க அமைச்சரவையில் சமர்ப்பித்ததை அடுத்து அதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான பி.திகாம்பரம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதன்போது மலையகத்தில் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட 12 ஆயிரம் வீடுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் நவீன் திஸாநாயக்க சமர்ப்பித்தார்.

இதில் 99 வருட கால குத்தகை அடிப்படையில் அனுமதிப் பத்திரத்தை வழங்குவது என்றும் சகோதரர்களுக்குள் வீடுகளை விற்பனை செய்ய முடியும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சர் திகாம்பரம் மற்றும் அமைச்சர் மனோகணேசன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
புதிதாகக் கட்டப்படும் வீடுகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு இந்த வீடுகளுக்கும் உறுதிப்பத்திரங்கள் உரியவகையில் வழங்கப்படவேண்டும். இதனை விடுத்து தற்போதைய செயற்பாடுகளை குழப்பும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடாது. மலையக மக்களுக்கு காணிகள் சொந்தமாக்கப்படும் வகையிலேயே உறுதிப் பத்திரம் வழங்கப்படவேண்டும் என்று அமைச்சர் திகாம்பரம் இதன்போது தெரிவித்துள்ளார்



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM