ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் தமது பதவி நிலை­களை மறந்து, போட்டி அர­சி­யலில் ஈடு­ப­டு­வ­தா­னது நாட்­டுக்கே பேரா­பத்­தாக அமையும். சின்­னத்­தி­ரை­களில் வரு­கின்ற மாமியார் மரு­மகள் சண்­டையைப் போன்றே இவர்­க­ளது நிலைமை நீடிக்­கின்­றது. அதி­கா­ரப்­போட்­டியை விடுத்து, நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் எதிர்­கா­லத்தைக் கருத்­திற்­கொண்டு செயற்­பட முன்­வர வேண்டும் என்று ஜன­நா­யக மக்கள் முன்­ன­ணியின் பிரதித் தலை­வரும், கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வேலு­குமார் தெரி­வித்­துள்ளார்.

கட்சி அர­சி­யலைக் கைவிட்டு எஞ்­சி­யுள்ள காலப்­ப­கு­தி­யி­லா­வது நாட்டின் நலனை முன்­னி­லைப்­ப­டுத்தி இரு­வரும் செயற்­ப­ட­வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

தொலைக்­காட்­சி­களில் தற்­போது ஒளி­ப­ரப்பப்படும் தமிழ் சின்­னத்­திரை நாட­கங்­களில் காலை முதல் மாலை வரை மாமி­யாரும் மரு­ம­களும் முட்­டி­மோதிக் கொள்­வார்கள். வீட்டின் சாவிக்­கொத்தை கைப்­பற்­று­வ­தற்கு மரு­ம­களும், அதைத் தக்­க­வைத்துக் கொள்­வ­தற்கு மாமி­யாரும் படா­த­பாடு படு­வார்கள். இதனால் வீட்டில் நிம்­மதி நிலைக்­காது.

இது­போல்தான் ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் தற்­போது மோதலில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இவர்­க­ளுக்­கி­டை­யி­லான நீயா, நானா என்ற அதி­காரப் போட்­டியால் நாட்டில் அர­சியல் குழப்பம் தலை­தூக்­கி­யுள்­ளது. 

அதிலும் குறிப்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாலர் வகுப்பு மாண­வர்போல் செயற்­பட்டு வரு­கிறார். பிர­த­மரை ஆத்திரமூட்டுவதற்காக அமைச்­ச­ர­வையைக் கூட்­டப்­போ­வ­தில்லை என்­றெல்லாம் கூறி­வ­ரு­கிறார்.

பாரா­ளு­மன்­றமும், அமைச்­ச­ர­வையும் ஜனா­தி­ப­தி­யி­னதோ அல்­லது பிர­த­ம­ரி­னதோ குடும்­பச்­சொத்து கிடை­யாது.  நான் முன்னர் கூறி­ய­துபோல் மாமிக்கும், மரு­ம­க­ளுக்­கு­மி­டையில் சண்டை ஏற்­பட்­டால்­கூட அதனால் இரண்டு குடும்­பங்­கள்தான் பாதிக்­கப்­படும். ஆனால், ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்­கு­மி­டை­யி­லான மோத­லா­னது ஒட்­டு­மொத்த இலங்­கைக்கும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும். எனவே, தனிப்­பட்ட நிகழ்ச்சி நிரலை செயற்­ப­டுத்­து­வ­தற்கு பொறுப்பு வாய்ந்த பத­வியில் இருப்­ப­வர்கள் முற்­ப­டக்­கூ­டாது.

ஒக்­டோ­பரில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆட்­சிக்­க­விழ்ப்பு சூழ்ச்சி, 21/4 தாக்­குதல் போன்­ற­வற்றால் இலங்­கையில் இன்னும் அர­சியல் ஸ்திரத்­தன்மை ஏற்­ப­ட­வில்லை. இதனால் பொரு­ளா­தா­ரமும் ஆட்டம் கண்­டுள்­ளது. 

இந்­நி­லையில் இரு தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான முறுகலானது, அரசியல் ஸ்திரமற்ற தன்மையை மேலும் நீடிக்கச்செய்யும்.

ஆகவே, அதிகாரப்போட்டியை விடுத்து, நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு செயற்பட முன்வருமாறு இருவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என வேலுகுமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.