600 கடி­தங்­க­ளுடன் கைது செய்­யப்­பட்ட 3 சந்­தே­க­ந­பர்­க­ளையும் பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதி­மன்­றத்தால் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. 

ஜனா­தி­பதி மற்றும் அர­சாங்­கத்­திற்கு எதி­ரா­கவும் இனங்­க­ளுக்கு இடையில் ஐக்­கி­யத்தை சீர்­கு­லைக்கக் கூடிய கருத்­துக்­க­ளையும் உள்­ள­டக்­கிய 600 கடி­தங்­க­ளுடன் 3 சந்­தே­க­ந­பர்கள் கடந்த மே மாதம்  2 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டனர். கோட்டை பொலிஸ் நிலை­யத்­திற்கு கிடைத்த தக­வல்­க­ளுக்கு அமைய கொழும்பு மத்­திய தபால் நிலை­யத்தில் கடி­தங்­களை பரி­மாறும் பிரிவில் இவர்கள் கைது செய்­யப்­பட்­டனர். 

கைது செய்­யப்­ப­ட்ட மூன்று பேரும் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்­லவின் அமைச்சின் ஊடகப் பிரிவில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.