பாடசாலை செல்லும் 14 வயது பெண்பிள்ளைகளின் மிக முக்கிய தேவையாக இருப்பது மென்சுரல் பேட். இது தற்போது விதவிதமான வகைகளில், நவீன வசதிகளுடன் சந்தையில் கிடைக்கிறது. இதனையே பெரும்பாலான பிள்ளைகள் பயன்படுத்த விரும்புகிறார்கள். 

ஆனால் பெற்றோர்கள் இத்தகைய பேடில் வேதியியல் மற்றும் ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன என்றும், இதன் காரணமாக பெண்களுக்கு எதிர்காலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம் என்றும் தகவல்கள் வெளியாகி வருவதைக் கேள்விப்பட்டு கவலையடைகிறார்கள். 

இதனால் அத்தகைய பேடுகளை வாங்கி தருவதில் பெற்றோர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில் இதற்கு மாற்றாக கருதப்படும் ஒர்கானிக் பேடுகளின் விலை அதிகம் என்பதுடன், சந்தையில் தேவைக்கு ஏற்ப கிடைப்பதில்லை. இதனால் வேறுவழியின்றி வேதியல் பொருள்கள் கலக்கப்பட்ட பேடுகளையே வாங்கி தருகிறார்கள்.

இந்த நிலையில் menstrual cup எனப்படும் ஒரு சாதனத்தை இத்தகைய தருணங்களில் பயன்படுத்தினால், சௌகரியமாகவும், விலை குறைவாகவும், நீண்ட நாளுக்கு வரக்கூடியதாக இருக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தற்போது பரிந்துரை செய்து வருகிறார்கள். இத்தகைய menstrual cup எந்தவிதமான ரசாயன சேர்க்கை இல்லாமல் தயாராகிறது.

 அத்துடன் இதனை ஒரு முறை வாங்கிவிட்டால், மீண்டும் மீண்டும் அதனை சுத்திகரித்து பயன்படுத்தக் கூடிய நிலையில் இருக்கிறது. இதற்கான வழிமுறைகளை மருத்துவ ஊழியர்கள் தெளிவாக விளக்கம் தருகிறார்கள். இதுகுறித்த பல தகவல்கள் இணையத்தில் கிடைக்கிறது. அதனை ஒரு முறை பார்வையிட்டு, இதனை பயன்படுத்த தொடங்கினால் பிள்ளைகளின் அந்த மூன்று நாள் பிரச்சனைக்கு பக்கவிளைவுகளற்ற தீர்வு கிடைக்கும். 

அவர்களின் மன நிலையில் எந்தவித மாற்றங்களுக்கும் இடங்கொடாமல், தொடர்ந்து கல்வியில் கவனம் செலுத்தி சித்தியெய்துவார்கள் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பெற்றோர்களும், மாணவிகளும் இதனை ஒரு முறை பரிசோதித்து பார்க்கலாமே...!

டொக்டர் ஸ்ரீதேவி.

தொகுப்பு அனுஷா.