அமலாபால் நடித்த ‘ஆடை’ படத்தின் டீசர் வெளியானது. இதில் அமலாபால் ஒரு காட்சியில் ஆடையே இல்லாமல் தோன்றி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.

‘மேயாத மான்’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஆடை. இந்த படத்தில் அமலா பால் கதையின் நாயகியாக நடிக்க, விவேக் பிரசன்னா, பிஜிலி ரமேஷ் ஆகியோர் உடன் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்திற்கு விஜய் கார்த்தி கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் குமார் இசையமைத்திருக்கிறார். வி ஸ்டுடியோ சார்பாக விஜி சுப்ரமணியன் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை ,வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ரத்னகுமார்.

இந்த படத்தை பார்வையிட்ட தணிக்கை குழுவினர், இயக்குனரை கடுமையான வார்த்தைகளால் கண்டித்ததுடன், உங்களைப் போன்ற படைப்பாளிகள் தான் இளைய சமுதாயம் தவறான பாதைக்கு செல்கிறார்கள் என்று தங்களது வருத்தத்தை தெரிவித்து விட்டு, படத்திற்கு சில காட்சிகளை நீக்கிவிட்டு ஏ சான்றிதழ் கொடுக்க முன்வந்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று வெளியானது. டீசரின் இறுதிக்காட்சியில் நடிகை அமலாபால் உடலில் துளிகூட துணி இல்லாமல், முழு நிர்வாணமாக நடித்திருக்கிறார். இதனால் இந்த டீஸருக்கு இணையத்தில் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இயக்குனரும், கணவருமான ஏ எல் விஜய் விவாகரத்து செய்த பிறகு, திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் அமலா பாலின் இந்த துணிச்சலான முடிவை திரை உலகில் சிலர் ஆதரிக்கிறார்கள். பொதுவெளியில் பலர் எதிர்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.