நீங்களா சஹ்ரானின் சித்தப்பா? - விமலின் கேள்வியால் சபையில் சர்ச்சை

Published By: Vishnu

18 Jun, 2019 | 09:08 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

தெமட்டகொடையில் குண்டை வெடிக்கவைத்து உயிரிழந்தவர் ரிஷாத் பதியுதீனின் சகோதரி. இஸ்லாமிய பயங்கரவாதிகளை பாதுகாக்க இன்னும் சிலர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சி எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்தார். 

இதன்போது அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்,பி குறுக்கிட்டபோது, நீங்கள் சஹ்ரானின் சித்தப்பாவா என கேட்டபோது இருவருக்குமிடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற மதுவரி கட்டளை சட்ட விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலே இவ்வாறு இரண்டுபேருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டது.

விமல் வீரவன்ச எம்.பி, அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

தெமட்டகொட குண்டு வெடிப்பில் ரிஷாத் பதியுதீனின் தாயாரின் சகோதரியே கொல்லப்பட்டதாக விமல் வீரவன்ச தெரிவித்த பொது அதனை  அப்துல்லா மஹ்ரூப் எம்.பி மறுத்தார். அத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவெனவும் கூறினார். 

இதன்போது விமல் வீரவன்ச, நீங்களா சஹ்ரானின் சித்தப்பா? ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்லவென்றால் சஹ்ரான்  என்ன இந்துவா அல்லது பௌத்தனா? ஐ.எஸ் .ஐ.எஸ் .பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் இல்லையா? சிரியாவில் கொள்வது முஸ்லிம்கள் இல்லையா? அதனால் நீங்கள்தான் அடிப்படைவாதிகளை பாதுகாப்பவர்கள். அதனால்தான் ரிஷாத் பதியுதீன்னுக்கு எதிராக குற்றம் தெரிவிக்கப்படுகின்றது. பெளசிக்கோ எம்.பிக்கோ ஹக்கீம் எம்.பிக்கோ இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுவதில்லை.

அதனால் இந்த நாட்டில் அடிப்படைவாதம் எந்த இனத்தில் இருந்து வந்தாலும் அதனை நாங்கள் தடுத்து நிறுத்தவேண்டும். அதற்கு தமிழ் முஸ்லிம், சிங்கள மக்கள் இணைந்து போராடவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை பாதுகாக்கலாம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37