மாநாயக்க தேரர்களின் ஆலோசனைகளுக்கு அமைய பொசன் கொண்டாட்டம் சிறப்பாக நிறைவுப்பெற்றுள்ளது. இடம்பெறவுள்ள எசல பெரஹரவிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவத்துள்ளதாவது,

சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், பொசன் தின நிகழ்வுகளுக்கு ஏற்ப சூழ்நிலைகளை அமைத்து தருமாறும் மநாயக்க தேரர்கள் கடந்த  ஐந்தாம் திகதி குறிப்பிட்டமைக்கு அமைய விசேட  ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

நிறைவடைந்த பொசன் பண்டினை இம்முறை உயர் மட்டத்தில் கொண்டாடப்பட்டது. அரசாங்கத்தின்  செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய மாநாயக்க தேரர்களுக்கும், அரச திணைக்கள அதிகாரிகளுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும்  நன்றியினை தெரிவித்துக் கொள்வது அவசியமாகும்.

இன, மத வேறுப்பாடின்றி  நாழு தழுவிய ரீதியில்  பொசன் தினத்தை மக்கள் கொண்டாடி இனவொற்றுமையினை வெளிப்படுத்தியுள்ளார்கள். இடம்பெறவுள்ள எசல பெரஹர நிகழ்விற்கும் அரசாங்கம் முழுமையான  ஆதரவு வழங்கும்.  இவ்விடயம் தொடர்பில் மல்வத்து- அஸ்கிரிய பீட மாநாயக்கர்களுடன் விசேட  பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.