ஜப்பானில் 6.8 ரிச்டெர் அளிவல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினையடுத்து ஜப்பானின் பல பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

ஜப்பானின் சகாடா பகுதியிலிருந்து 30 மைல் தூர கடற்பரப்பிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் ஜப்பானின் யமகடா, நிகாடா மற்றும் இஷிகாவா பகுதிகளிலும் சுனாமி அலை ஜப்பான் நேரப்படி இரவு 10.22 மணியளவில் தாக்கக்கூடும் எனவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன் அந் நாட்டு அரசாங்கம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் அறிவுறுத்தியுள்ளது..