கிளிநொச்சி மத்திய ஆரம்ப பாடசாலைக்குரிய அரச காணியை அடாத்தாக கையகப்படுத்தி தொழில் செய்து வருகின்ற கரைச்சி பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என கரைச்சி பிரதேச செயலக செயலாளர் த.முகுந்தன் தெரிவித்துள்ளார்
பாடசாலைக்குரிய அரச காணியை ஆக்கிரமித்துள்ள விடயம் தொடர்பில் பிரதேச செயலாளருடன் தொடா்பு கொண்டு வினவிய போது,
குறித்த பிணக்கு நீண்டகாலமாக காணப்படுகிறது. பாடசாலைக்குரிய அரச காணியில் அடாத்தாக பிடித்து தொழில் நடவடிக்கையினை மேற்கொண்டு வருபவருக்கு மூன்று இடங்களில் மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டன.
அந்த மூன்று இடங்களும் பெறுமதியான இடங்கள். ஆதாவது கணகாம்பிக்குளம் இரணைமடு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு முன்பாக, இரண்டாவது பொன்னகர் யாழ் பல்கலைகழக பொறியியல் விவசாய தொழிநுட்ப பீடங்கள் அமைதுள்ள பிரதேசம், மூன்றாவது கணகாம்பிக்கைகுளம் உதிரவேங்கை வைரவர் ஆலயத்திற்கு அருகில் வழங்கப்பட்டது.
ஆனால் இதில் எந்த இடத்திற்கும் செல்ல மறுக்கும் அவர் ஏ9 வீதியோரமாக தன்னுடைய வியாபார நிலையத்தை நடத்துகின்ற பொருத்தமான இடமாக வழங்கினால் பாடசாலை காணியை வழங்கத்தயார் எனத் தெரிவித்து வருகின்றார்.
எனவே இது தொடர்பில் பாடசாலை சமூகமும் எமது கவனத்திற்கு கொண்டுவந்திருக்கின்றன.
ஆகவே அவருக்கு எதிராக அரச காணியை ஆக்கிரமித்துள்ளார் என வழக்குத் தாக்கல் செய்து பாடசாலைக்கு காணியை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM