பொய்யான செய்திகளைப் பரப்பினால் 5 வருடம் சிறை - 10 இலட்சம் அபராதம் 

Published By: R. Kalaichelvan

18 Jun, 2019 | 05:36 PM
image

(நா.தனுஜா)

நல்லிணக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு என்பவற்றுக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடிய பொய்யான செய்திகளைப் பரப்புவோருக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

அதன்படி இத்தகைய குற்றச்செயல்களுக்கு குறைந்தபட்சம் 10 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 5 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டையும் சேர்த்து அனுபவிக்கும் விதமாக குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையில் அரசாங்கத்தினால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பு என்பவற்றுக்கு இடையூறை ஏற்படுத்தக்கூடிய பொய்யான செய்திகளைப் பரப்புவதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கத்தக்க வகையில் குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தமொன்றைக் கொண்டுவருமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிடம் தேசிய பாதுகாப்பு தொடர்பான குழு வேண்டுகோள் விடுத்திருந்தது.

அதற்கமைய நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் பதிலமைச்சராகத் தொழிற்படும் பொதுநிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குற்றவியல் தண்டனைச் சட்டக்கோவையில் திருத்தமொன்றுக்கான முன்மொழிவைச் சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனவே நல்லிணக்கம், தேசிய பாதுகாப்பு என்பவற்றுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்பும் நபருக்கு குறைந்தது 10 இலட்சம் ரூபா அபராதம் அல்லது 5 வருடங்களுக்குக் குறையாத சிறைத்தண்டணை அல்லது அபராதம் மற்றும் சிறைத்தண்டனை இரண்டையும் அனுபவிக்க நேரும் வகையில் தண்டனை வழங்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04