தனது மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக ஒரு பிள்ளையின் தந்தையின் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று காலை ஹட்டன் குடாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் குடாகம பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட குறித்த நபர் அவருடன் ஏற்பட்ட வாய்தர்க்காத்தின் காரணமாகவே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.