(செ.தேன்மொழி)

முன்னாள் ஆளுனர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்களின் பின் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வந்த ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் ரிஷாத் பதியூதீன் ஆகியோர் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தால் மூவர் அடங்கிய குழுவொன்று கடந்த 4 ஆம் திகதி நியமிக்கப்பட்டடிருந்து. 

இந்த குழுவிற்கு இவர்களுக்கு எதிராக 27 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இவர்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து,  விசாரணைகளை மேற்கொள்ள இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுக்களிலே குற்றப் புலனாய்வு மற்றும் நிதி குற்ற விசாரணை பிரிவின் அதிகாரிகள் உள்ளடங்குவாதாகவும் தெரியவந்துள்ளது.