(நா.தனுஜா)

அரசியலமைப்பின் 19 ஆவது சீர்திருத்தம் நாட்டில் பல்வேறு சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. இது பாராளுமன்றத்திற்கும், நிறைவேற்றதிகாரத்திற்கும் இடையிலான முரண்பாட்டை மேலும் உச்சநிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

 

அதேபோன்று பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தற்போதைய செயற்பாடுகளைப் பார்க்கும்போது அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராகத் தேவையற்ற அதிகாரங்களைப் பயன்படுத்தி, அவர்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும்  செயற்பாடு இடம்பெறுவது தெளிவாகின்றது. இவற்றைக் கருத்திற்கொண்டு  இனியும் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமா, இல்லையா என்பதை பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.