தமிழ் பிக்பொஸ் சீசன் 3 ஆரம்பமாக இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமேயுள்ள நிலையில் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்ற கணிப்பு அனைவரிடமும் தோன்றியுள்ளது.

பிக்பொஸ் நிகழ்ச்சிக்காக வெளியான பிரமோ வீடியோவில் இந்தமுறை 15 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும், ஜூன் 23-ம் திகதி முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து நடிகை மதுமிதா கலந்து கொள்ள இருப்பதும் உறுதியானது.

இந்நிலையில் தற்போது பாடகர் மற்றும் நடிகரான மோகன் வைத்யா நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறை பாடகரும், குரல் வளப்பயிற்சியாளருமான ஆனந்த் வைத்தியநாதன் கலந்து கொண்ட நிலையில் இம்முறையும் ஒரு பாடகரை களமிறக்க நிகழ்ச்சிக் குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

பாடகர் மோகன் வைத்யா, அந்நியன், சேது உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் மற்ற போட்டியாளர்களின் பெயர் பட்டியலும் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 23 அன்று இரவு 8 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. மேலும் தினமும் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.