வவுனியா நகரசபை மைதானத்தில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற சமுர்த்தி நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்விற்கு அமைக்கப்பட்ட பதாதை 10நாட்கள் கடந்த நிலையிலும் இன்று வரையில் நகரசபை பிரதான வாயிலிருந்து அகற்றப்படவில்லை.

சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு கடந்த 09.06.2019 ஞாயிற்றுக்கிழமை நகரசபை மைதானத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

சமுர்த்தித்திணைக்களமும் மாவட்டச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்விற்கு ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்ட நிகழ்விற்கு அமைக்கப்பட்ட பதாதை இன்று வரையிலும் நகரசபை பிரதான வாயிலிருந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் அகற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.