மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு . வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 2000 ஏக்கர் காணிகள் யாருக்கும் தெரியாத வகையில் வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சினால் வர்த்தமானி விளம்பரம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க் கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக்குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்,
மண்முனை மேற்கு பிரதேசத்தில் மேய்ச்சல் தரைக்காகவும், விவசாய மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற 2000 ஏக்கர் காணிகள், மாவட்டத்தின் அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலாளருக்கும் தெரியாத வகையில் அப்போதைய வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சராகவிருந்த ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய காலத்தில், குறிப்பாக 2017ஆண்டு ஜூன் மாதம் 05ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது.
இதில், ஆயிலியடிச்சேனையில் 507.25 ஏக்கரும், கண்டியநாற்றில் 726 ஏக்கரும், பன்சேனையில் 548.5ஏக்கர் காணியும் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது.
இக்காணிகளில் பன்சேனை பகுதியில் 50 ஏக்கரில் சோளார் மின் உற்பத்திக்காக பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
மாவட்டத்தில் உள்ள யாருக்கும் தெரியாத வகையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது. இச்செயற்பாட்டின் மூலமாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை இழக்கும் நிலையேற்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் அரச தரப்பினர் உரிய கவனம் செலுத்தி உடனடியாக வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM