(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்காகக் கொண்டே பாராளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

சபாநாயகர் கரு ஜயசூரிய பதவிக்கு பொருந்தும் விதத்தில் சுயாதீனமாக செயற்படுகின்றார் என்று நம்பிக்கை  கொள்ள முடியாது. ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்ற  கனவில் மூழ்கி விட்டார் என பாராளுமன்ற உறுப்பினரும்,   ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளருமான  தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில்  இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு  தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இன்று பல  விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.  இவர் தொடர்பில் ஆரம்பத்தில் இருந்தே ஐக்கிய தேசிய கட்சி தவறான ஒரு நிலைப்பாட்டை உருவாக்கி விட்டது. 

சபாநாயகர் கரு ஜயசூரிய  பதவிக்கு ஏற்றாட் போல சுயாதீனமாக செயற்படுகின்றார் என்பது சந்தேகத்திற்குரியது.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளுக்கும், அரசியல் செயற்பாடுகளுக்கும்  முக்கியத்துவம் கொடுக்கின்றார்.

 2018.10. 26ம்  திகதிக்கு பின்னர் இவர் முழுமையாக ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி   வேட்பாளர் கனவில் மூழ்கி விட்டார் என்றார்.