உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தவர்கள் இன்று தமிழ் தேசியம் பேசுகின்றனர் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்தார்.
வவுனியா ஐக்கிய விளையாட்டுக்கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
இன்று நாம் பத்தாயிரம் ரூபா பொருட்களை வழங்கி விட்டு தம்மை விமர்சிப்பதாக தெரிவிக்கின்றனர். நாங்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொகையில் பல இடங்களில் இவ்வாறு விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காகன உபகரணங்களை வழங்கி வருகின்றோம். அவை 30 இலட்சத்தினையும் தாண்டியுள்ளது. இதற்குமப்பால் 70 மில்லியன் ரூபாவில் வீதி வேலைகளும் இடம்பெற்று வருகின்றது.
எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே நாம் இதனை செய்கின்றோம். எமக்கு கம்பரலிய இல்லை. எனினும் நாம் மக்களுக்கான தேவைகளை முடிந்தளவு நிறைவு செய்து வருகின்றோம்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு எப்போது அரசுடன் முரண்பட்டு ஆதரவை வாபஸ் பெறுகின்றதோ அன்று இந்த ஆட்சியில் மாற்றம் ஏற்படும். இவ்வாறு இருக்கையில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு முண்டு கொடுத்துவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமையை தமிழ் தேசியக்கூட்டபைம்பு பெற்றுக்கொள்ள வேண்டும் என நாம் ஞாபகமூட்டுவதை சிலர் குறையாக நினைக்கின்றனர்.
நாங்கள் தேசிய அரசாங்கத்தில் இருந்த காலத்திலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பங்காளிக்கட்சியாகவே இருந்தது. அதனூடாக நிதியைப்பெற்று வேலைத்திட்டங்களை செய்தார்கள் அது பாராட்டத்தக்க விடயம். எனினும் இந்த தொங்கும் பாராளுமன்றத்தை பயன்படுத்தி உரிமையை பெறவில்லை என்பதே எமது கவலை.
எத்தனை வருடங்காக உரிமைப்போராட்டம் நடைபெற்றது. அது காட்டிக்கொடுப்புக்களால் தோற்கடிக்கப்பட்டது. இன்று காட்டிக்கொடுத்தவர்கள் தமிழ் தேசியம் பேசுகின்றார்கள். அவ்வாறான நிலையே இன்று உருவாகியுள்ளது. இந்நிலையில்தான் நாம் கூறுகின்றோம் .
அபிவிருத்திகளுடன் உரிமையையும் பெறவேண்டும். உரிமையை பெறுவதற்கான முயற்சியையும் கட்டாயமாக எடுக்க வேண்டும்.
இன்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவது வேடிக்கையாகவுள்ளது. தற்போதைய நிலைமையால் இனப்பிரச்சனைக்கான தீர்வையும் உரிமையையும் பெறமுடியாதுள்ளதாக கூறுகின்றனர். அவ்வாறெனில் இவ்வாளவு காலமும் என்ன செய்தீர்கள் என கேட்கின்றேன் என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM