(ஆர்.விதுஷா)

இலங்கைக்கான  நான்கு  நாள்  விஜயத்தை  மேற்கொண்ட  இந்திய  முப்படையின்  பிரதிநிதிகள்  இன்று மீண்டும்  நாடு  திரும் உள்ளதாக  இராணுவ  ஊடகப்பேச்சாளர்  பிரகேடியர்  சுமித்  அத்தப்பத்து  தெரிவித்தார்.  

இந்திய முப்படைப்பிரதிநிதிகள் 159 பேர் தமது மனைவிமார்  சகிதம்   கடந்த சனிக்கிழமை அதிகாலை  இலங்கைக்கான நல்லென்ன சுற்றுப்பயணத்தினை  மேற்கொண்டு  இலங்கையின்  சிறப்பு  மிக்க  சுற்றுலாத்தளங்களை  பார்வையிட்டிருந்தனர்.

 இந்  நிலையில் இன்று பிற்பகல்  3 மணியளவில் மீண்டும்  நாடு திரும்ப உள்ளதாக தெரிவித்தார்..  

இவர்கள் இலங்கையில்  தங்கியிருந்த  போது  மத்திய  மற்றும்  மேற்கு  பிரதேசங்களுக்கான   சுற்றுலாப்பயணத்தை  மேற்கொண்டதுடன்,  தளதாமாளிகை , யானைகள் சரணாலயம்  என்பனவற்றையும்  பார்வையிட்டுள்ளனர்.    

இலங்கை - இந்திய படையினருக்கிடையிலான  நல்லிணக்கத்தை வலுப்படுத்தும்  நோக்கிலேயே  இந்த  சுற்றுப்பயணம்  அமையப்பெற்றிருந்தது. 

 இவ் விஜயத்தில்  இந்திய  இராணுவப்படையினர்  95பேரும் , கடற்படையினர் 32 பேர்  மற்றும் விமானப்படையினர்   32 பேர் உள்ளடங்கலாக  159 பிரதிநிதிகள்   பங்கு  கொண்டிருந்தனர்.  

இதே வேளை, பொசன்  பௌர்னமி தினத்தை  முன்னிட்டு  இலங்கையின் முப்படை  பிரதானிகள்  162பேர்  இந்தியாவிற்கான  யாத்திரையை  கடந்த சனிக்கிழமை  மேற்கொண்டிருந்தi குறிப்பிடத்தக்கது.