வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் கும்புறு மூலை கிராமத்திற்குள் உட் புகுந்த காட்டு யானைகள்  அட்டகாசத்தில் ஈடுபட்டதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  காட்டு யானைகள் மேற்குறித்த பிரதேசத்தின் கடற்கரையோரம் உள்ள தென்னந்தோட்டங்கள் பலவற்றிக்குள் இரவு  புகுந்து  பயன் தரும் நூற்றுக்கான தென்னை மரங்களை வேருடன் சாய்த்து துவம்சம் செய்துள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

இதனால் தோட்டக்கரார்களுக்கு நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர்.

இப் பிரதேசத்தின் வீதி ஊடாக மீன் பிடி தொழிலுக்கு செல்பவர்கள் அச்சமடைந்து காணப்பட்டதனால் கடந்த ஒரு வார காலமாக  தொழிலுக்கு செல்லாமல் பாதிப்படைந்துள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த காலப் பகுதியில் கல்குடா கிராமசேவகர் பிரிவின் வலைவாடி மீன் பிடி கிராமத்தில் உள் நுழைந்த காட்டு யானைகள் பொதுமக்களை பெரும்  பீதிக்கு உட்படுத்தியமை  குறிப்பிடத்தக்கது.