பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சஹிப் அல்ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் இணைந்து நேற்றைய போட்டியில் இணைப்பாட்ட சாதனையொன்றை பதிவுசெய்துள்ளனர். 

ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள், மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நேற்று மணிக்கு டவுன்டனில் இடம்பெற்றது.

இப் போட்டியில் பங்களாதேஷ் அணி பொறுப்பான ஆட்டத்தனால் மேற்கிந்தியத்தீவுகள் அணி நிர்ணயித்த 322 என்ற இமாலய இலக்கினை 7 விக்கெட்டுக்களினால் கடந்து வெற்றிபெற்றது.

இப் போட்டியில் பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடும்போது 4 ஆவது விக்கெட்டுக்காக கைகோர்த்த சஹிப் அல்ஹசன் - லிட்டன் தாஸ் இருவரும் இணைந்து 189 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் ஆட்டமிழக்காதிருந்து அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியிரந்தனர்.

இவர்கள் இருவம் பெற்றுக் கொண்ட 189 என்ற இந்த ஓட்டமே 2019 ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஒருநாள் உலக கிண்ண தொடரின் அதிகூடிய ஓட்டங்களாக தற்போது பதிவாகியுள்ளது.

இத் தொடரில் இவர்களுக்கு முன்னர் ஆரோன் பிஞ்ச் - ஸ்டீவ் ஸ்மித் இருவம் இணைந்து இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 3 ஆவது விக்கெட்டுக்காக 173 ஓட்டங்களையும், ஆரோன் பிஞ்ச் - டேவிட் வோர்னர் இருவரும் இணைந்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலாவது விக்கெட்டுக்காக 146 ஓட்டங்களையும், சஹுப் அல்ஹசன் - முஸ்பிகுர் ரஹும் இருவரும் இணைந்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் மூன்றாவது விக்கெட்டுக்காக 142 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.