மாமியாரைத் தாக்கிய மருமகன் கைது - யாழில் சம்பவம்

Published By: Daya

18 Jun, 2019 | 01:47 PM
image

மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நடத்திய மருமகனையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 9 மணியளவில் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தில் உடுவில் கடவுள் சந்திதியில் வசிக்கும் 74 வயதுடைய ஐயாத்துரை என்ற பெண்ணே கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் அயலவர்களால் அம்புலன்ஸில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

குறித்த பெண்ணின் மகளின் கணவரே தாக்குதலை நடத்தியுள்ளார். அவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.



“வயோதிபப் பெண்ணின் காணி ஒன்றை தமக்கு எழுதி வழங்குமாறு மருமகனான சந்தேகநபர் கேட்டுள்ளார். ஏற்கெனவே சீதனமாக காணி ஒன்று வழங்கப்பட்டுள்ளதால், தன்னிடமுள்ள மற்றைய காணியை தனது மகனுக்கு தேவை என்று மாமியார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காணியை எழுதி வழங்குமாறு மருமகன் இன்று மாமியாரைத் தாக்கியுள்ளார்” என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38