Published by R. Kalaichelvan on 2019-06-18 12:20:42
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் மேற்கொள்ளப்படும் நிபந்தனை மீறிய தொழில்களால் தமது தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்னர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் உள்ள கடற்தொழிலை நம்பி சுமார் 4500 இற்குமேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் பல்வேறு வகையான சட்டவிரோத தொழில்களும் நிபந்தனை மீறிய தொழில்களும் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால் கடற்தொலை நம்பிய மீனவக்குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதாவது, முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் வளர்மதி கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்கத்தின் கீழ் சுமார் 175 இற்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர் எனத்தெரிவித்த கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வே. திசைவீரசிங்;கம் அவர்கள் குறிப்பிடுகையில், தற்போதைய வரட்சி காரணமாக நந்திக்கடல் நீர்மட்டம் குறைவடைந்து சிறுகடற்தொழிலாளர்களின் தொழில்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆழ்கடல்பகுதிகளல் சுருக்கு வலை பயன்படுத்துதல் வெளிச்சம் பாச்சுதல் நிபந்தனைகளை மீறிய வகையில் இரவுகிளல் கரைவலை இழுத்தல் போன்ற தொழில்கள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டுள்ன.
இதனால் கடற்தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆழிப்பேரலையாலும் யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட மீனவ சங்கத்தின் பிரச்சனைகள் தொடர்பில் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் பாராமுகமாகவே இருந்து வருகின்றனர்.
இதனால் தொழில் வாய்ப்பு முழுயையாக இழக்கப்பட்டநிலையில் மீனவர்கள் தற்கொலைக்கு செல்லும் நிலை காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.