வென்னப்புவ- பண்டிருப்பு, லுனுவில பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் சமையலறைக்குள் தீ பற்றி எரிந்தமையால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

58 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம்  நேற்று இரவு 07.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில், சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்திலேயே பதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உயிரிழந்த பெண் அந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.