இந்தியா, புது டெல்லியை சேர்ந்த 24 வயது நிரம்பிய இளைஞர் தனது காதலியுடன் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஏதிர்பாராத விதமாக இருவரும் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரானை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அந்த இளைஞர் மீது அவனது காதலியே ஆசிட் தாக்குதல் நிகழ்த்தியதும், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தானும் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளார் என்ற பரபரப்பான தகவல் பொலிஸார் விசாரணை மூலம் வெளியாகியுள்ளது.

இது குறித்து காவல்துறை தரப்பில் இருந்து கூறியதாவது:-

டெல்லியை சார்ந்த 24 வயது நிரம்பிய இளைஞர் 19 வயது நிரம்பிய தனது காதலியுடன் இரு சக்கர வாகனத்தில் டெல்லியில் உள்ள விகாஸ்பூரி பகுதியில் செல்லும் போது ஏதிர்பாராத விதமாக இருவரும் ஆசிட் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த தாக்குதல் குறித்து அடையாளம் தெரியாத நபர் என வழக்கு பதிவு செய்து விசாரித்தோம். 

சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ச்சி செய்தோம் அதில் தாக்குதலுக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆசிட் வீச்சில் அந்த பெண்ணுக்கு காயங்கள் எதுவும் பெரிதாக ஏற்படவில்லை. மேலும் பைக்கில் வேகமாக செல்லும் போது எப்படி சரியாக முகத்தில் ஆசிட் வீசப்பட்டது என சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து தாக்குதலில் முகத்தில் படுகாயம் அடைந்த இளைஞரிடம் விசாரனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர் தான் தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும் தனது காதலி அதனை நீக்குமாரு தன்னிடம் தெரிவித்ததாகவும் தான் அதனை நீக்கியவுடன் முகத்தில் ஏதோ திரவியம் வீசப்பட்டது போன்று உணர்ந்தேன் என தெரிவித்தார்.

இதனால் அந்த பெண் மீது மிகுந்த சந்தேகம் அடைந்த பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தானே தனது காதலன் மீது கழிவறையினை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிடினை ஊற்றியதாகவும்,பொலிஸாரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க தனது முகத்திலும் சிறிய அளவு ஆசிட்டை ஊற்றியதாகவும் குற்றத்தினை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் அப்பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், காதலன் மீது ஆசிட் ஊற்றியதற்கான காரணமாக அந்த பெண் கூறியது பொலிஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த பெண் கூறிய வாக்கு மூலத்தில் தானும் தனது காதலனும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், ஆனால் தன் காதலன் கடந்த சில மாதங்களாக தன்னிடம் சரி வர பேசவில்லை என தெரிவித்தார். மேலும் எங்களது உறவினை முடிவிற்கு கொண்டுவர எனது காதலன் முயற்சி செய்தார். இதனால் அவர் வேறு ஒரு பெண்ணுடன் பழகி வருகிறார் என சந்தேகம் ஏற்பட்டதாகவும் கூறினார். ஆனால் தனது காதலனை தானே திருமணம் செய்ய விரும்பியதால் அப்பெண் தனது காதலன் வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதாக எண்ணி அவர் மீது ஆசிட் ஊற்றியுள்ளார். 

இவ்வாறு பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வழங்கியுள்ளன.