ஜனா­தி­பதி பெஞ்­ஜமின் நெட்­டன்­யாஹு தனது நாட்டால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட கோலன் ஹைட்ஸ் பிராந்­தி­யத்­தி­லுள்ள புதிய குடி­யி­ருப்பு பிர­தே­சத்­திற்கு அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் பெயரை சூட்டி அதனை வைப­வ­ரீ­தி­யாக நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை  திறந்­து­வைத்­துள்ளார்.

அந்தப் பிராந்­தி­ய­மா­னது  பொது­வாக சர்­வ­தேச ரீதியில்  சிரி­யாவின் பிராந்­தி­ய­மாக கருப்­ப­டு­கின்ற நிலையில் அது தொடர்பில் இஸ்­ரேலின் இறை­மையை அங்­கீ­க­ரிக்க டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்­மா­னத்­துக்கு கௌர­வ­ம­ளிக்கும் வகை­யி­லேயே  அதற்கு டொனால்ட் ட்ரம்பின் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ள­தாக  இஸ்­ரே­லிய  ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

 அந்த ‘ட்ரம்ப் ஹைட்ஸ்" பிராந்­தி­யத்தை கட்­ட­மைப்­ப­தற்­கான பணிகள் இன்னும் ஆரம்­ப­மா­காத நிலையில் ட்ரம்பின் பெயர் மற்றும் அமெ­ரிக்க, இஸ்ே­ர­லிய கொடி­க­ளைக் கொண்ட அடை­யாள சின்னம் திரை­நீக்கம் செய்து வைக்­கப்­பட்­டது. 

அந்தக் குடி­யி­ருப்பு பிராந்­தியம் வானு­யர்ந்த குடி­யி­ருப்புக் கட்­டி­டங்கள், ஹோட்­டல்கள் மற்றும் குழிப்­பந்­தாட்ட மைதானம் என்­ப­னவற்றை உள்­ள­டக்கி நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்­நி­லையில் இந்தக் குடி­யி­ருப்பு பிர­தே­சத்தின் பகி­ரங்க திரை­நீக்­கத்­திற்கு சட்­ட­பூர்­வ­மான அதி­காரம் எதுவும் கிடை­யாது என அதன் எதிர்ப்­பா­ளர்கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளனர். 

இஸ்­ரே­லா­னது கோலன் ஹைட்ஸ் பிராந்­தி­யத்தை 1967 ஆம் ஆண்டு மத்­தி­ய­கி­ழக்குப் போரின் போது சிரி­யா­வி­ட­மி­ருந்து கைப்­பற்­றி­யி­ருந்­தது. அதனை அந்­நாடு 1981 ஆண்டில் தன்­னுடன் இணைத்­துக்­கொண்ட நிலையில் அந்தப் பிராந்­தி­யத்தை இஸ்­ரேலின் இறை­மைக்­கு­ரிய பிராந்­தி­ய­மாக அங்­கீ­க­ரித்த முத­லா­வது நாடாக அமெ­ரிக்கா விளங்­கு­கி­றது.

''இது வர­லாற்று முக்­கி­யத்­துவமிக்க தின­மாகும்" எனத் தெரி­வித்த பெஞ்­ஜமின் நெட்­டன்­யாஹு, ''ஜனா­தி­பதி ட்ரம்ப் இஸ்­ரேலின்  ஒரு நண்­ப­ராவார்" என்று கூறினார்.

மேற்­படி திரை­நீக்க வைப­வத்தில் அமெ­ரிக்கத் தூதுவர் டேவிட் பிரைட்மான் கலந்­து­கொண்டார். கோலன் ஹைட்­ஸி­லுள்ள புதிய குடி­யி­ருப்­பொன்­றுக்கு  ட்ரம்பின் பெயரை சூட்­டு­வ­தாக இஸ்­ரே­லிய  பிர­தமர் கடந்த ஏப்ரல் மாதம் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கோலன் ஹைட்ஸ் பிராந்தியத்தில்  குடியிருப்பை ஸ்தா பிப்பது தொடர்பான பெஞ்ஜமின் நெட்டன்யாஹுவின்  தீர்மானத்திற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.