ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன இம்மாத இறுதியில் கம்போடியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

கம்போடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்றே ஜனாதிபதி இரண்டு நாட்கள் பயணமாக நொம்பென்னுக்கு செல்லவுள்ளார்.

எதிர்வரும் 26ஆம் திகதி அவர் கம்போடியாவுக்குப் புறப்பட்டுச் செல்வார் என்றும் 27ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என்றும் ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

கடந்தவாரம் தஜிகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, நேற்று முன்தினம் நாடு திரும்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.