இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட ஆடு­க­ளங்கள் தொடர்பில் திருப்­தி­ய­டைய முடி­யா­துதான் என்று இலங்கை அணியின் முன்னாள் தலை­வரும் உலகக் கிண்ணச் சம்­பியன் தலை­வ­ரு­மான அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்­துள்ளார்.

அதே­வேளை இலங்கை அணிக்கு மத்­திய வரிசை துடுப்­பாட்ட வீரர்கள் திறம்­பட செயற்­பட்­டல்தான் வெற்­றி­பெற முடியும் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

இங்­கி­லாந்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக் கெட் போட்டித் தொடரில் இலங்­கைக்கு இது­வ­ரையில் வழங்­கப்­பட்­டுள்ள ஆடு­க­ளங்கள் தொடர்பில் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தது இலங்கை அணி.

இந்­நி­லையில் இதற்கு அர்­ஜுன ரண­துங்­கவும் ஆதரவு வழங்­கி­யுள்­ளார். 

இது கு­றித்து அவர் கூறு­கையில், இந்த விவ­காரம் தொடர்பில் தற்­போ­தைய கிரிக்கெட் நிறுவனம் எவ்­வித எதிர்ப்­பையும் வெளி­யி­டாது அமைதி காத்து வரு­கி­றது.

கிரிக்கெட் போட்­டி­களில் வெற்­றி­யீட்­டு­வது, தோல்­வி­ய­டை­வது வழ­மை­யா­னது. 

எனினும், இலங்கை கிரிக்கெட் அணி பல்­வேறு பிரச்­சி­னை­களை எதிர்­நோக்கி வரு­கி­றது.

அணியின் முகா­மை­யாளர் அசந்த டி மெல் கூறு­வது போன்று இலங்­கைக்கு ஆடு­க­ளங்­களை வழங்­கு­வதில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளதா என்ற சந்­தேகம் எழு­கி­றது.

இந்த விடயம் தொடர்பில் நீதி­யான விசா­ரணை நடத்­து­மாறு ஐ.சி.சி.யிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்­கப்­பட வேண்டும்.

விளை­யாட்­டுத் ­துறை அமைச்­ச­ரேனும் இது குறித்து முறைப்­பாடு செய்ய வேண்­டு­மெனத் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, உலகக் கிண்ணப் போட்டி போன்ற முக்­கி­ய­மான போட்­டி­களில் ஆடு­க­ளங்­களில் ஒரு சீரான தன்மை காணப்­பட வேண்­டு­மென இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்­கக்­கா­ரவும் தெரி­வித்­துள்ளார்.

நாடு­க­ளுக்கு நாடு மைதா­னத்­துக்கு மைதானம் ஆடுகளத்தின் தன்மை பாரிய மாற்றங்களுடன் காணப்படுகிறது. இதனால் அணிகள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ஒரு புறம் தங்களது மோசமான துடுப்பாட்டத்தால் தோல்வி கண்டு வந்தாலும் மைதானத்தின் குளறுபடிகளும் இருக்கத்தான் செய்கின்றன.