மூட்டு மாற்று சத்திர சிகிச்சையை வெற்றி பெற வைக்கும் ஓக்சீனியம்

Published By: Robert

02 May, 2016 | 08:39 AM
image

இன்றைய திகதியில் முதுமையடைந் தவர்களுக்கு மட்டுமல்லாமல் நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கும் மூட்டு வலி வருவது அதிகரித்துவிட்டது. முழங்காலில் உள்ள மூட்டு இரண்டு பக்க எலும்புகளுக்கிடையே பந்து போல உருண்டு கொண்டிருக்கிறது. உடற்பருமன், உடற்பயிற்சியின்மை, பாரம் பரியம் என பல்வேறு காரணங்களால் இரு எலும்புகளுக்கிடையே உள்ள சவ்வு சேதம டைந்துவிடுகிறது. இதனால் மூட்டு இயல்பாக இயங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது முதலில் வலியாகத் தொடங்கி பின்னர் வீக்கம் என்ற நிலையை அடைந்து இறுதியில் நடக்க இயலாத நிலையை எட்டிவிடும்.

இவர்களுக்கு இன்றைய நிலையில் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை தான் சரியான தீர்வு. இன்றும் ஒரு சாரார் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையின் ஆயுள் குறித்தும், அந்த சிகிச்சை பத்து அல்லது பன்னிரண்டு ஆண்டு களுக்குத்தான் பலனளிக்கும் என்றும் கருதி வருகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மூட்டு மாற்று சத்திர சிகிச்சையில் நல்ல நீண்ட பலனளிக்கும் படியான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மூட்டு வலிக்கு அங்குள்ள எலும்புகளின் தேய்மானம் தான் மூல காரணம். மூட்டு எலும்பு இணைப்பைச் சுற்றியுள்ள சவ்வு முற்றிலும் தேய்ந்த பிறகு, அந்த கிண்ணம் போன்ற அமைப்பில் இருந்து எலும்பு வெளியே வரத் தொடங்கும். இதனால் முத லில் மாடிப்படிகளில் ஏறவோ அல்லது இறங் கவோ சிரமமாகவும் வலியும் இருக்கும்.

கை கால்களில் உள்ள எலும்புகளில் முறிவு ஏற்பட்டால் அங்கு கட்டு போடுகிறார்கள். அதனால் அவ்விடத்தில் அசைவு இருக்காது. ஆனால் மூட்டில் அசைவு தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். அதனால் மூட்டில் கட்டுப் போட இயலாது.

இதனால் தேய்மானம் அடைந்த எலும்பின் அடிப்பாகத்தை மட்டும் அகற்றிவிட்டு புதிய இணைப்பை மருத்துவர்கள் பொருத்துகின்­றா­ர்கள். இரு எலும்புகளும் இணையும் இடத்தில் உலோகம் வைத்து சவ்வுக்கு பதிலாக ஒரு வகையான பிளாஸ்டிக்கை வைப்பது வழக்கம். இத்தகைய சத்திர சிகிச்சை ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே பொருத்தமானதாக இருக்கும்.

ஆனால் இன்றைய திகதியில் இந்த தொழில்நுட்பம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய் தவர்களுக்கு அதில் பொருத்தப்பட்டுள்ள உலோகம் ஒவ்­வா­மையை ஏற்படுத்துவதால் அதனை மாற்றியமைத்திருக்கிறார்கள். அத்து டன் உலோகம் பொருத்தப்பட்டவர்களுக்கு உராய்வும் கீறல்களும் தோன்றியதும் இதன் மாற்றத்திற்கு ஒரு காரணமாக முன்வைக் கலாம்.

தற்போது அதற்கு பதிலாக ஒக்சீனியம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இதன் அரிப்புத் தன்மை உலோ­கத்தை விட 4500 மடங்கு குறைவானது. மேலும் இதனைப் பொருத்தும் போது அதன் மேல் ஒரு கோட்டிங் ஏற்படுகிறது. அது மூட்டு அசையும் போது ஹைடென்சிட்டி பொலி எத்தலீன் மீது உராய்வுகளை ஏற்படுத்துவதில்லை. உராய்வு ஏற்படவில்லை என்றாலோ உடையவில்லை என்றாலோ அந்த மூட்டின் ஆயுள் எதிர்பார்த் ததை விட அதிக காலம் நீடிப்பதற்கு வாய்ப்பு உருவாகிறது.

இதைப் பொருத்தினால் வழக்கமாக செய்து கொள்ளும் மூட்டு மாற்று சத்திர சிகிச்சையின் ஆயுள் பலனை விட பத்து ஆண்டுகள் மேலும் கூடுதலாக தாக்குப் பிடிக்கும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன் இந்த ஒக்சீனியத்தைப் பயன்படுத்தி சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் போது, சத்திர சிகிச்சை முடிந்தவுடன் நோயாளி எழுந்து நிற்கலாம். நடக்கலாம் என்ற நிலையும் சாத்தியமாகிறது.

இவ்வகையான சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள், சத்திர சிகிச்சைக்கு பின்னர் ஐந்து அல்லது ஆறாவது நாளில் வீடு திரும்பலாம். இயல்பான வாழ்க்கையை தொடங்கலாம்.

அதே போல் பழைய தொழில்நுட்பத்தில் எலும்பையும் மெட்டலையும் இணைக்க எலும்பு சிமெண்ட் பயன்பட்டது. ஆனால் அவ்வகையான சிகிச்சைக்கு அவை பயன் படுத்தப்படுவதில்லை. எனவே மூட்டு மாற்று சத்திர சிகிச்சையின் போது ஒக்சீனியத்தைப் பயன்படுத்தினால் மூட்டு வலி மறைவதுடன் ஆரோக்கியமாக மேலும் பல ஆண்டுகள் மூட்டு வலி இல்லாமல் இருக்க இயலும்.

டாக்டர். எம்.நந்தகுமார்

தொகுப்பு: அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயஸ்தீனியா கிராவிஸ் எனும் ஒட்டோ இம்யூன்...

2024-02-27 15:19:13
news-image

இணைப்பு திசுக்களில் ஏற்படும் பாதிப்புக்குரிய நவீன...

2024-02-26 17:08:02
news-image

சிலிகோசிஸ் எனும் நாட்பட்ட நுரையீரல் பாதிப்பிற்குரிய...

2024-02-22 17:04:44
news-image

டெர்மடோமயோசிடிஸ் எனும் தசை வீக்க பாதிப்பிற்குரிய...

2024-02-20 16:54:31
news-image

தீவிர ஒவ்வாமை பாதிப்புக்குரிய நவீன சிகிச்சை

2024-02-19 18:58:31
news-image

மென்திசு சர்கோமா புற்றுநோய் பாதிப்புக்குரிய நவீன...

2024-02-17 17:36:29
news-image

பிரைமரி பிலியரி கோலாங்கிடிஸ் எனும் கல்லீரல்...

2024-02-17 16:39:47
news-image

செரிபிரல் வெனஸ் த்ராம்போஸிஸ் எனும் பெரு...

2024-02-16 20:22:59
news-image

தட்டணுக்களின் எண்ணிக்கை குறைபாட்டிற்குரிய நவீன சிகிச்சை

2024-02-14 16:15:29
news-image

லிம்பெடிமா எனும் நிணநீர் மண்டல பாதிப்பிற்குரிய...

2024-02-13 16:55:56
news-image

புற்று நோய்க்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை...

2024-02-12 16:40:05
news-image

நியூரோஎண்டோகிரைன் கட்டிகளுக்கு நிவாரணமளிக்கும் சிகிச்சை

2024-02-09 16:49:44