(ஆர்.விதுஷா)

தொடர்குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற  தெரிவுக்குழு மீது  எமக்கு நம்பகத்தன்மை கிடையாது. 

குழுவுக்கு  வழங்கப்பட்ட  பொறுப்புக்களுக்கு  மாறாக  அரச  அதிகாரிகளை  அசௌகரியத்துக்கு  உட்படுத்துவதை  ஏற்றுக்கொள்ள  முடியாது. எனவே தெரிவுக்குழு விசாரணை நடவடிக்கைகள்  தொடர்பில்  விசேட கவனம் செலுத்த வேண்டும் என கடிதமொன்றின் ஊடாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்    அரசாங்க  வைத்திய அதிகாரிகள்  சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்தோடு சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித  சேனாரத்ன மீதான நம்பிக்கையின்மையை வெளிக்காட்டும்  வகையில் பத்து இலட்சம் பொதுமக்களின் கையொப்பங்களுடன்  அவருக்கு எதிரான  நம்பிக்கையில்லா  பிரேணையொன்றையும்   கொண்டும் வரும்  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் அவர்கள் குறிப்பிட்டனர்.

அரசாங்க  வைத்திய அதிகாரிகள்  சங்கத்தின்  தலைமையகத்தில்  இன்று இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அரசாங்க  வைத்திய அதிகாரிகள்  சங்கத்தின்  செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.