இலங்கை அணியின் மீது எந்த தடைகளோ அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லையென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான போட்­டியின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் சபையின் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லையென்பதால் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யிருந்தது. 

இது­கு­றித்து விசா­ரணை நடத்­தி­வரும் ஐ.சி.சி. இலங்கை அணிக்கு பெரும் தண்­டனை வழங்­கவும் வாய்ப்­புள்­ள­தாக செய்திகள் வெளியாகின.

கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்ற அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ரான போட்­டியில் இலங்கை அணி 87 ஓட்­டங்­களால் தோல்­வி­ய­டைந்­தது. இந்தப் போட்­டிக்குப் பிறகு ஊட­க­வி­ய­லா­ளர்­களைச் சந்­திக்­காமல் இலங்கை அணி புறக்­க­ணித்­துள்­ளது.

ஐ.சி.சி.யின் விதி­மு­றைப்­படி போட்டி முடிந்த பின் வெற்றி பெற்ற அணியும் தேல்­வி­ய­டைந்த அணியும் ஊடக­ங்களைச் சந்­தித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற கட்­டுப்­பாடு இருக்­கி­றது. 

இந்த விதி­மு­றையை மீறிய இலங்கை அணி ஆஸி.க்கு எதி­ரான போட்டி முடிந்த பின் அனைத்து வீரர்­களும் ஊட­க­வி­யலா­ளர்­களைச் சந்­திக்­காமல் சென்­று­விட்­டனர். 

இது ஐ.சி.சி. விதி­மு­றை­யின்­படி ஒழுக்­கக்­கே­டானது, விதி­முறை மீறல் என்­பதால் இலங்கை அணிக்கு தடை­வி­திப்­பது குறித்து ஐ.சி.சி. ஆலோ­சிப்­ப­தாக சர்­வ­தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையிலேயே இலங்கை அணியின் மீது எந்த தடைகளோ அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லையென இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.