(இராஜதுரை ஹஷான்)

நாட்டு மக்கள் மீது  அக்கறை கொள்ளாத  ஐக்கிய தேசிய கட்சி அழிவடைந்து செல்கின்றது என்று பகிரங்கமாக அரசாங்கத்திற்கு எதிராக மநாயக்க தேரர்  குறிப்பிட்டுள்ள கருத்திற்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு  என்ன.

 

மதத்தலைவர்களின் கருத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தற்போது  நாட்டு மக்களின் மீது எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை.தேவையற்ற விடயங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காலம் சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்  காமினி திஸாநாயக்கவின் கொள்கைகளையும், அவர் நாடு மீது கொண்டு தனித்துவ பற்றினையும். இவருக்கு பிறகு எவரும்  முன்னெடுத்து செல்லவில்லை.

முறையற்ற விதத்தில் செயற்படும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆயுட்காலம் முடிவடைந்து வருகின்றது.  அழிவினை  எவரும் ஏற்படுத்தவில்லை,  ஐக்கிய தேசிய கட்சியே தேடிக் கொண்டது என்று  அஸ்கிரிய பீட மநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ  ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளமைக்கு  அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன

2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் நாட்டு மக்கள் செய்த தவறினை இன்று  நன்கு புரிந்துக் கொண்டுள்ளார்கள். மக்கள் மத்தியில் சென்று  வாக்கு கோருவதற்கு  ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான நடப்பு அரசாங்கத்திற்கு எவ்வித தகைமையும் கிடையாது.

 ஆட்சி மாற்றத்தையே இன்று அனைத்து  மக்களும் எதிர்பார்க்கின்றார்கள்.

இவ்வூடக சந்திப்பில் கலந்துக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்   டலஸ் அழகப் பெரும குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் மர்றுப்பட்ட உபாயங்களை முன்னெடுத்தாலும், அது ஒருபோதும் வெற்றிப் பெறாது. நவம்பர் மாதம் 23ம் திகதி நிச்சயம் ஜனாதிபதி தேர்தல் இடம் பெறும்.  டிசெம்பர் மாதம்  கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை இடம் பெறவுள்ளமையினால்  நவம்பர் மாதமே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்மென அவர் இதன்போது தெரிவித்தார்.