சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சை சான்றிதழ்களை இணையளத்தினூடாக எவ்வாறு பெறுவது?

Published By: Vishnu

17 Jun, 2019 | 05:43 PM
image

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்படும் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களை பெற வேண்டுமாயின் இணையத்தளத்தினூடாக (online) பெற்றுக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்படும் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை சான்றிதழ்களை பெற வேண்டுமாயின் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வர வேண்டிய நிலைமை இவ்வளவு காலம் இருந்தது.

சான்றிதழ்களை பெறுவதற்கு பல பிரதேசங்களில் இருந்தும் நாள்தோறும் பெரும்பாலானோர் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வருகை தருகின்றனர். இதன்காரணமாக சான்றிதழ் வழங்கும் செயல் முறைக்கான காலம் அதிகமாக இருப்பதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. 

இந்த பிரச்சினைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக தீர்வினை வழங்குவதற்கு விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வரலாற்றில் முதற்தடவையாக கல்வி பொதுத்தராதர சாதாணர தர மற்றும் உயர் தர பரீட்சை சான்றிதழ்களை இணையத்தளங்களின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் செயற்பாடுகளை நவீனமயப்படுத்துவதற்கான 2017 ஆம் ஆண்டு கல்வி அமைச்சரின் ஆலோசனை பேரில் விசேட புத்திஜீவிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரையின் பிரகாரம் குறித்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்காக இனிமேல் பரீட்சைகள் திணைக்களத்திற்கு வர வேண்டியதில்லை. இதன்படி நவீனமயப்படுத்தப்பட்ட பரீட்சைகள் திணைக்களத்திற்கான இணையதளத்தின் ஊடாக பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

இணையதளத்தின் ஊடாக எவ்வாறு சான்றிதழை பெற்றுக்கொள்ளல் மற்றும் பணம் செலுத்தல் போன்ற செயல் முறை கீழ்வருமாறு,

• www.doenets.lk இணையதளத்திற்குள் நுழையவும்.

• அங்குள்ள request for certificate இற்கு நுழையவும்.

• முன் சென்ற பின் request for certificate என்று காட்டப்படும் பச்சை நிறத்திலுள்ளவையை அழுத்தவும்.

• அதன்பின்னர் காட்சிப்படும் தகவல் பெறல் அட்டவணையில் தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உட்சேர்க்கவும். அதனுடன் இணையதளத்தில் மோசடி காரியங்களில் ஈடுப்படமாட்டேன் என உறுதிப்படுத்தவும்.

• அதனுடன் உங்களது தொலைபேசிக்கு கிடைக்கும் OTP CODE யை உட்சேர்க்கவும்.

• அதன்பின்னர் உங்களுக்கு சான்றிதழ் பெற தேவையான பரீட்சை மற்றும் பரீட்சைக்கு தோன்றிய வருடம், பரீட்சை இலக்கம் ஆகியவற்றை சரியாக உட்சேர்க்கவும் (2001 ஆம் ஆண்டு முதல் நடந்த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைக்கான சான்றிதழ்களை மாத்திரம் தற்போதைக்கு இந்த இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.)

• உட்சேர்க்கப்பட்ட உங்களது பெயர் பிழையற்றதா என மீள்சரிபார்க்கவும்.

• ஏதாவது பிழைகள் இருப்பின் திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

• அதன்பின்னர் பரீட்சை சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான பல்வேறு செயல்முறைகள் இருக்கும். அதில் ஒன்றை தெரிவு செய்து எத்தனை சான்றிதழ் வேண்டும் என்பதனை குறிப்பிட்டு உறுதிப்படுத்தவும்.

• சான்றிதழை எவ்வாறு கிடைக்க வேண்டும் என்ற செயல் முறையை கூறவும்.

• பதவி தபாலின் ஊடாக கிடைக்கபெற வேண்டுமாயின் திரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு உங்களது தகவல்களை பூரணமாக தரவும்.

• நீங்கள் செலுத்த வேண்டிய தொகை தொடர்பான தகவல் திரையில் காட்சிப்படுத்தப்படும்.

• Proceed to payment click செய்யவும்.

• பணத்தை செலுத்தும் முறைமையை தேர்ந்தெடுக்கவும்.

• Card மூலம் பணத்தை செலுத்தும் முறைமை திரையில் காட்சிப்படுத்தப்படும்.

• அதனை பூரணப்படுத்தியதன் பின்னர் உங்களது தகவல்கள் மற்றும் கட்டணம் தொடர்பான குறிப்பு காட்சிப்படுத்தப்படும். அதன்பின்னர் proceed click செய்யவும்.

• அதன்பின்னர் உங்களுக்கு reference number ஒன்று கிடைக்கும்.

• தபால் மூலம் பணத்தை செலுத்துவதாயின் உங்களுக்கு reference number எடுத்துக்கொண்டு தபால் காரியாலயத்திற்கு சென்று பணத்தை செலுத்த முடியும். பணத்தை செலுத்தியதன் பின்னர் மீளவும் இணையளத்திற்கு பிரவேசித்து I Already made the payments க்குள் நுழையவும்.

• உங்களுக்கு கிடைத்த reference number யை உட்சேர்க்கவும்.அதன்பின்னர் உங்களின் கொடுப்பனவின் தகவலை காண்பிக்கும்.

• பெறுபேறுகளில் ஏதாவது பிரச்சினைகள் public results verification இல் நுழைந்து அதனை கூறவும்.

• இது தொடர்பாக இன்னும் பல தேடல்களுக்கு இணையத்தளத்தின் check certificate status க்குள் நுழையவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17