இலங்கையின் முதலாவது செய்மதியான ராவணா - 1 பூமியின் சுற்றுவெளியில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. 

ராவணா -1 இன்று பிற்பகல் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. 

அமெரிக்க சர்வதேச செய்மதி நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட ராவணா - 1 என்ற செய்மதி 400 கிலோமீற்றர் தொலைவில் பூமியின் சுற்றுவெளியில் நிலைகொள்ளவுள்ளது.

முன்னதாக ராவணா-1 எனப் பெயரிடப்பட்ட இந்த செய்மதி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் மூன்று மணியளவில் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்மதி விண்வெளியில் பூமியை சுற்றி வரும் ஒழுக்கில் சேர்க்கப்படும்.

கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ராவணா - 1 என்ற செய்மதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.