அடிப்படைவாத மத்ரஸாக்களை எப்போது தடை செய்யப் போகின்றார்கள்? - பொதுபலசேனா கேள்வி 

Published By: Vishnu

17 Jun, 2019 | 04:18 PM
image

(நா.தனுஜா)

இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷாரப் உள்ளிட்டோர் தமது நாடுகளில் தடை செய்த பாரம்பரியமற்ற அடிப்படைவாத மத்ரஸாக்களை இலங்கையில் எப்போது தடை செய்யப் போகின்றார்கள்? அவ்வாறு தடை செய்யாமல் மற்றுமொரு சஹ்ரான் நாட்டில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தும் வரை பொறுமை காத்துக்கொண்டிருக்கிறார்களா? என்று பொதுபலசேனா அமைப்பு கேள்வி எழுப்பியிருக்கிறது.

பொதுபலசேனா அமைப்பு இன்றைய தினம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாக்கிஸ்தான் மக்தப் குர்-ஆனை போதிக்கும் அடிப்படைவாதக் கல்வியை மீண்டும் இன்றைய தினத்திலிருந்து ஆரம்பிப்பதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் தலைவர் ரிஸ்வி முப்தி தீர்மானித்திருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அத்தோடு மக்தப் மத்ராஸா பாடசாலைகளுக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள அராபிய ஆடையான கறுப்பு, வெள்ளை நீண்ட சட்டை அணிவதை மீண்டும் அறிவிக்கும் வரை தவிர்த்துவிட்டு, சாதாரண ஆடையணித்து மக்தப் மத்ரஸா பாடசாலைக்கு வருமாறு கூறப்பட்டுள்ளமை, இரகசிய செயற்பாடுகள் ஆரம்பமாவதை உணர்த்துகிறது.

இந்நாட்டில் அராபிய கலாசாரத்தை நிலைநாட்டுவதற்கு முயற்சிப்பதுடன், பாரம்பரிய முஸ்லிம்களை சமூகத்திலிருந்து பிரித்து சமூகப் பிளவை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கும் உலமா அமைப்பிடம், நாட்டிற்குள் தேவையற்ற சிக்கல்களைத் தோற்றுவிக்காமல் உடனடியாக மக்தப் மத்ரஸா பாடசாலை செயற்பாடுகளை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம். அத்தோடு உலமா அமைப்பின் தலைவர் தாம் உள்ளிட்ட பல முஸ்லிம்களும் கற்றுக்கொண்ட தாலிமூல் குர்-ஆன் பாடநெறியை மீண்டும் வலுப்படுத்தி, நாட்டிற்குள் வஹாபிஸ பரவுகைக்கு எதிரான நிலைப்பாட்டையே உலமா அமைப்பு கொண்டுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.

பாரம்பரிய முஸ்லிம் பள்ளிவாசல்களில் எத்தகைய ஆடையை வேண்டுமானாலும் அணிந்து, இலவசமாகக் கற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்த தாலிமூல் குர்-ஆன் கல்விமுறையை உலமா சபையின் தலைவர் தடைசெய்ததுடன், கட்டணம் அறவீடு செய்து, அடிப்படைவாதத்தைப் போதிக்கும் மக்தப் குர்-ஆன் மத்ரஸா பாடசாலைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்தப் மத்ரஸா பாடசாலைகள் இயங்கி வருவதுடன், அப்பாடசாலைகள் ஒரு மாணவனிடமிருந்து 1000 ரூபாவை அண்மித்த தொகையை அனுமதிக் கட்டணமாக அறவிடுகின்றது. அதுமாத்திரமன்றி ஒவ்வொரு மாணவனிடமும் மாதாந்தம் 500 ரூபா வீதம் அறவிடப்படுகின்றது. இதன்மூலமாக உலமா அமைப்பிற்கு மாதாந்தம் மில்லியன் கணக்கான நிதி வருமானமாகப் பெறப்படுவதுடன், அந்நிதி எதற்காக உபயோகப்படுத்தப்படுகிறது என்ற பாரிய சந்தேகம் சமுதாயத்தின் மத்தியில் எழுந்துள்ளது.

ஒரு இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானின் முன்னாள் பிரதமர் பர்வேஸ் முஷாரப் உள்ளிட்டோர் தமது நாடுகளில் தடை செய்த பாரம்பரியமற்ற அடிப்படைவாத மத்ரஸாக்களை இலங்கையில் எப்போது தடை செய்யப் போகின்றீர்கள் என்று உரிய அதிகாரிகளிடம் கேள்வி எழுப்ப விரும்புகின்றோம். அவ்வாறு தடை செய்யாமல் மற்றுமொரு சஹ்ரான் நாட்டில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தும் வரை பொறுமை காத்துக்கொண்டிருக்கிறீர்களா என்றும் அவர்களிடம் கேட்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10