(நா.தினுஷா)
சிகரெட் உள்ளிட்ட புகையிலை உற்பத்திகளின் வீழ்ச்சியே எமது வெற்றியாகும் என தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, புகையிலைசார் உற்பத்திகளை குறைப்பதற்கு தேவைாயன சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையில் காணப்படும் பிரதான சுகாதார பிரச்சினைகளில் தற்போது மருந்து பொருகளின் விலை மற்றும் புகையிலை பாவனை முக்கிய இடம் வகிக்கின்றன. ஆனால் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பாரிய சவால் காணப்படுகிறது. புற்றுநோய்,போதை பொருள் பாவனை,பொது மருந்துகளின் பாவனை, வீதி விபத்துக்கள், கொலை சம்பவங்கள் போன்றவையால் ஏற்படும் மரண சம்பவங்களை விட புகையிழை பாவனையால் ஏற்படும் மரணங்களின் வீதம் அதிகமாகும்.
சட்டவிரோதமாக சிகரட்டுக்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டவுடன் சிகரட் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளே இவ்வாறான சட்டவிரோத சிகரட்டுக்கள் இறக்குமதி செய்யப்படுவதாக அதனுடன் தெடர்படைய நிறுவனங்களே அரசாங்கம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. சட்டவிரோத சிகரெட்டுக்கள் கொள்வனவில் புகையிலை உற்பத்தி சார் நிறுவனங்களுக்கும் தொடர்புள்ளது. ஆகவே அவர்களின் எதிர்ப்பை கண்டு அஞசப்போவதில்லை. புகையிலை உற்பத்திகளையும் பாவனையும் குறைப்பதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM