அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்திய பிரஜைகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் அயோவா மாநிலத்திலுள்ள வெஸ்ட் டெஸ் மொய்னஸ் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 44 வயதுடைய சந்திர சேகர் சுங்காரா அவரது மனைவியான 41 வயதுடைய லாவண்யா சுங்காரா மற்றும் 15 வயது மற்றும் 10 வயதுள்ள அவர்களது இரு மகன்களும் வசித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த 4 பேரும் அவர்கள் வசித்த வந்த வீட்டில் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேரின் உடல்களில் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து இருந்த நிலையில், அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது விசாரணைகளில் தெரியவந்தது.

இந்நிலையில்,இவ்வாறு அவர்களை சுட்டுக் கொன்றது யார்? எதற்காக அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என இதுவரை தெரியவராதபோதிலும் இதுகுறித்து தொடர்ந்து அமெரிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.