இலங்கை மக்களுக்கான வங்கித் துறையில் உண்மையான தலைமைத்துவ வங்கி என்பது மீண்டும் ஒரு முறை இலங்கையிலுள்ள அனைத்து வர்த்தக வங்கிகளின் வர்த்தக குறியீடுகளுக்கு மத்தியில் இலங்கை வங்கி தொடர்ச்சியாக எட்டாவது வருடமாகவும் Brand Finance Lanka வினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தகைமை மதிப்பீடு மற்றும் புலனாகா சொத்துக்கள் மதிப்பீட்டில் விசேட நிபுணத்துவம் பெற்ற பிரிட்டனின் Brand Finance அமைப்பின் பங்குதாரராக Brand Finance Lanka செயற்பட்டுவருகிறது. இந்த UK Brand Finance உலகளாவிய ரீதியில் 17 நாடுகளின் வலைப்பின்னலுடன் செயற்பட்டு வரும் அமைப்பாகும். வர்த்தக குறியீடான இலங்கை வங்கியின் வளர்ச்சியை 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதன் வளர்ச்சி 38 பில்லியன் ரூபாவிலிருந்து 41 பில்லியன் ரூபா வரையிலான அதிகரிப்புடன் 8.78 வீத வளர்ச்சியை 2016 ஆம் ஆண்டில் பெற்றுள்ளது.
இலங்கை வங்கியின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ரொனால்ட் சி.பெரேரா இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையர்கள் அடங்கலாக எமது பங்குதாரர்களுக்கும் ஆகக்கூடிய பெறுமதியை பெற்றுக் கொடுப்பதுடன் அனைவருக்குமான பயன்களை விரிவுபடுத்துவதுமே எமது முக்கிய நோக்கமாகும். மிகவும் நேர்த்தியான முற்போக்கான பாதையில் நாடு முன்னோக்கி பயணிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நீண்டகால பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு வங்கியியல் துறையில் தலைவராக விளங்கும் இலங்கை வங்கி தமது பொறுப்புக்களை முன்னிலைப்படுத்தி நிதித்துறையுடன் தொடர்புபட்ட அனைத்து பிரிவுகள் ஊடாக நாடு திட்டமிட்டுள்ள அபிவிருத்தி இலக்கை எட்டுவதற்கான உதவிகளை உறுதி செய்துள்ளது.
இதனால் நாட்டின் முதல்தர வங்கி என்ற இந்த கௌரவம் எட்டாவது வருடமும் தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட்டுள்ளமை எமது அர்ப்பணிப்பான சேவை முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என குறிப்பிட்டார்.
இந்த நம்பகத்தன்மையுடன் இலங்கையர்களின் வங்கி என்ற நாமத்துடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள இலங்கை வங்கி, நிதித் தொழில் துறையில் கடந்த 76 வருடங்களாக தலைவராக செயற்பட்டு வருவதுடன், இலங்கை வங்கியல் துறையில் பல துறைகளிலான அபிவிருத்தி எல்லைக் கோட்டை தனதாக்கிக்கொண்டுள்ளது. வங்கி ஆரம்பிக்கப்பட்ட 1939 ஆம் ஆண்டு முதல் இலங்கை மக்கள் வாழ்க்கையின் செல்வச்செழிப்புக்கு வங்கியின் தனது சேவைகள் மூலம் உதவிவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM