ஏறா­வூரில் பள்­ளி­வா­சல்கள் மற்றும் வீடு­களில் காணப்­படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் கிரந்தங்கள் அனைத்­தையும் ஒரு மணித்­தி­யா­லத்­துக்குள் அகற்­று­மாறு ஏறா வூர் பொலிஸ் நிலை­யத்தில் கட­மை­யாற்றும் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒரு­வ­ரினால் அறி­வு­றுத்தல் வழங்­கப்­பட்­டமை தொடர்பில் ஏறாவூர் பள்­ளி­வா­சல்கள் மற்றும் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ள­னத்­தினால் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலிசாஹிர் மௌலா­னாவின் கவ­னத்­திற்கு கொண்டு செல்­லப்­பட்­டது. 

இத­னை­ய­டுத்து, குறித்த பிரச்­சினை தொடர்பில் பிரதி பொலிஸ் மாஅ­திபர் தம்­மிக்க பெரேரா மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி நளின் ஜய­சுந்­தர ஆகி­யோ­ருக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரால் அறி­விக்­கப்­பட்­டதையடுத்து உட­ன­டி­யாக பொலி­ஸாரின் குறித்த அறி­வு­றுத்தல் மீளப்­பெ­றப்­பட்­டது.

இவ்­வி­டயம் தொடர்பில் தனது அதி­ருப்­தி­யையும் கண்­ட­னத்­தையும் வெளி­யிட்ட அலி­சாஹிர் மெள­லானா எம்.பி., சட்­ட­மாக்­கப்­ப­டாத எந்­த­வொரு விட­யத்­தையும் தற்­து­ணிவின் அடிப்­ப­டையில் ஒரு சில பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் அமு­லாக்க முற்­ப­டு­வது முறை­யான செயற்­பா­டல்ல எனவும் இது தொடர்பில் உட­னடி கவனம் செலுத்த வேண்டும். அத்­துடன், பள்­ளி­வா­சல்­க­ளிலும் வீடு­க­ளிலும் அல் குர்ஆன் வச­னங்­களை வைத்­தி­ருப்­பதை தடை­செய்ய முற்­ப­டு­வது மத நிந்­தனை செயற்­பா­டா­கவே உள்­ளது.

தேசிய மொழிக்­கொள்­கையின் பிர­காரம் அரச பொது இடங்­க­ளி­லுள்ள வேற்று மொழி­யி­லான வாச­கங்கள் அகற்­றப்­ப­ட­வேண்­டு­மெனக் கூறப்­பட்ட விட­யத்தை தமது தனிப்­பட்ட விருப்பு வெறுப்­புக்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி பள்­ளி­வா­சல்­க­ளிலும் வீடு­க­ளிலும் வாக­னங்­க­ளி­லு­முள்ள அல்­குர்ஆன் வச­னங்­களை அகற்ற வேண்­டு­மென்று எச்­ச­ரிக்கும் பொலி­ஸாரின் செயற்­பாடு முற்­றாக நிறுத்­தப்­பட்ட வேண்டும். இவ்­வா­றான செயலில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்றார்.