சட்டவிரோதமான முறையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவரை மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக காத்தான் குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மணல் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு டிப்பர் வாகனங்களும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

அனுமதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தை மாற்றி காத்தான்குடி பிரதேசத்திற்கு மணலை கடத்திச் சென்றபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நபர்களும் டிப்பர் வாகனமும் காத்தான்குடி பொலிசாரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

கைதான சந்தேக நபர்களும் வாகனமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.