உணர்வுகளை சீண்டிவிடுவாதால் ஏற்படும் விளைவுகள் அதற்கு வினையான ஒரு சம்பவம் இந்தியாவின் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஆதிச்சனூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மகனான இளமதி என்பவருக்கு சில தினங்களுக்கு முன்னர் திருமணம் இடம்பெற்றது.

திருமணத்தை அடுத்து அன்றையதினம் இரவு திருமண நிகழ்வின் போது கிடைக்கப்பெற்ற மொய்ப் பணம் மற்றும் திருமணதந்துக்கான வரவு - செலவுகள் குறித்து தந்தையும் மகனும் கணக்குப் பார்த்தனர். 

கணக்கு முன்னுக்குப் பின் முரணாக இருக்கவே,இது குறித்து  தந்தை, மகனிடம் விபரம் கேட்க இருவருக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மகனான இளமதி காலையில் கணக்கைப் பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டு வீட்டினுள் செல்ல முயன்றுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த தந்தை சண்முகம், `முதலிரவுக்குப்போவது முக்கியமா,கணக்கு வழக்கு முக்கியமா. ஒழுங்கு மரியாதையாக கணக்கை சொல்லிட்டுப் போடா' எனக் கூறி  மகனின் தோளைப் பிடித்து நிறுத்தியதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்நிலையில் மகனான இளமதி  தந்தையின் கையைத் தட்டிவிட்டுச் செல்ல முயன்றுள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த தந்தை சண்முகம், அருகில் இருந்த கட்டையை எடுத்து மகனைத் தாக்கியதைத் தொடர்ந்து  அந்த கட்டையை தந்தையிடமிருந்து பறித்து, தந்தையின் தலையில் மகன் இளமதி அடித்ததோடு, அவரை கீழே தள்ளியிருக்கிறார். 

கிழே விழுந்த தந்தை சண்முகம் மயக்க நிலையில் இருப்பதாக எண்ணி உறவினர்கள், தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்ற போதும் இறுதி வரையில் தந்தை சண்முகம் எழும்பவில்லை. 

எனவே அவசர சிகிச்சைக்குட்படுத்தப்பட்ட சண்முகம் பரிசோதனையின் போது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சண்முகத்தின் உறவினர் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய மகன் இளமதி கைதுசெய்யப்பட்டு  விசாரனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்த கிராமத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.