ராவணா-வன் எனப் பெயரிடப்பட்ட இந்த செய்மதி இன்று இலங்கை நேரப்படி பிற்பகல் மூன்று மணியளவில் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்று ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்மதி விண்வெளியில் பூமியை சுற்றி வரும் ஒழுக்கில் சேர்க்கப்படும்.

கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ராவணா - வன் என்ற செய்மதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது. இன்றைய தினம் அந்த நிலையத்திலிருந்து இந்த செய்மதி ஓடம் 'ஒழுங்கிற்கு' சேர்க்கப்படும்.

இந்த நிகழ்வு தொடர்பான நேரலைகளை இலங்கைவாழ் மக்கள் பார்வையிடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆர்தர் சி கிளார்க் மையம் செய்துள்ளது. 

இந்த நேரடி ஒளிபரப்பு, இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30இல் இருந்து மொரட்டுவ - கட்டுபெத்த ஆர்தர் சி கிளார்க் மையத்தில் மேற்கொள்ளப்படும்.